சென்னை: ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கும், ரேஷனுக்கும் தொடர்பில்லை என்று உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருள் தரமாட்டார்கள் என்பது பொய்யான தகவல் என்றும் ரேகை, கருவிழி பதிவு செய்யாதவர்களுக்கு, பதிவேட்டில் கையொப்பம் பெற்று பொருட்கள் வழங்கப்படுகிறது என்றும் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை என்றும் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.