சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய வந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார். ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக காவல்துறை குற்றம் சாட்டியது. கடத்தப்பட்ட சிறுவனை ஏடிஜிபி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது. நீதிமன்றத்தில் ஆஜரானபோது சீருடையில் சென்ற ஏடிஜிபி ஜெயராம், சாதாரண உடையில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். சிறுவன் கடத்தல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவையடுத்து ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து போலீஸ் அழைத்துச் சென்றது.
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் கைது
0