Friday, March 1, 2024
Home » பழநி மலைக்கோயிலில் காவலாளிகள் தாக்கியதில் பக்தர் மண்டை உடைந்தது: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பழநி மலைக்கோயிலில் காவலாளிகள் தாக்கியதில் பக்தர் மண்டை உடைந்தது: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

by Dhanush Kumar

பழநி: பழநி மலைக்கோயிலில் காவலாளிகள் தாக்கியதில் பக்தர் மண்டை உடைந்தது. இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நேற்று சேலம் மாவட்டம், இடைப்பாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது வரிசையில் தாண்டி குதித்ததாக கூறி இடைப்பாடியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் சந்திரன் (55) என்பவரை, அங்கு பணிபுரிந்த செக்யூரிட்டிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்த நிலையில் சந்திரன் மலைக்கோயிலில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சந்திரனுக்கு கட்டு போடப்பட்டு சிசிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரனின் உறவினர்கள் மற்றும் உடன் வந்தவர்கள் மலைக்கோயிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி சுப்பையா தலைமையிலான போலீசார் மற்றும் கோயில் உயரதிகாரிகள் விரைந்தனர். சந்திரன் தரப்பினரிடம் புகார் மனு பெறப்பட்டு, தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

You may also like

Leave a Comment

eight − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi