சென்னை: முகூர்த்த நாளான இன்று, பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும் .