செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பணியினை வெ.ச.நாராயண சார்மா பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு செங்கல்பட்டு வருவாய் கோட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வந்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக இருந்த, அனாமிகா ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement


