சென்னை: தமிழகம் முழுவதும் வட்டாட்சியர்கள் 10 பேர், துணை ஆட்சியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா வெளியிட்ட உத்தரவு: மதுரை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் சரவணன், திருநெல்வேலி தனித்துணை ஆட்சியராகவும், மதுரை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் சிவபாலன் தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராகவும், மதுரை வட்டாட்சியராக இருந்த பாலாஜி, விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும், திருவாரூர் மாவட்ட வருவாய் அலகு, வட்டாட்சியர் பிரிதிவிராஜன், நாகப்பட்டினம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் திருநாவுக்கரசு சிவகங்கை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராகவும், மதுரை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் உதயசங்கர் விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராகவும், திருவாரூர் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் குணசீலி, திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் புகழேந்தி, சென்னை, சிப்காட் தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு), சிவகங்கை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் செந்தில்வேலு திண்டுக்கல் தனித்துணை ஆட்சியராகவும் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) என 10 பேருக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியராக பணிநியமனம் வழங்கப்படும் வட்டாட்சியர்களை பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்படும் முன்பாக அவர்களின் மீது குற்றச்சாட்டுகள் அல்லது தண்டனைகள் ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் மாவட்ட வருவாய் அலகிலிருந்து மாவட்ட ஆட்சியர்கள் விடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.