சென்னை: விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை முதல் செப்.19 வரை கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோவை சுற்றுப்பகுதிகள் மற்றும் வெளி ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகைக்கு செல்லவும் திரும்ப வரவும் சிறப்பு பேருந்துகள் இயக்கம். ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.