செய்யூர், : செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த, வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சூனாம்பேடு காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த இந்த பேரணியை சூனாம்பேடு காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில், பள்ளி ஆசிரியர்கள், காவல் துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.