ஐதராபாத்: தொழிலதிபர் அதானி வழங்கிய ரூ.100 கோடி நன்கொடையை ஏற்க தெலங்கானா காங்கிரஸ் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இளைஞர்களுக்கு தொழில்துறை திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்காக அம்மாநில முதல்வரிடம் அதானி ரூ.100 கோடி நன்கொடை வழங்கினார். அதானி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அதானி வழங்கிய நன்கொடையை ஏற்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் முடிவு செய்துள்ளார். தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி வெற்றியடையாது என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அதானி வழங்கிய ரூ.100 கோடியை ஏற்க தெலங்கானா மறுப்பு
0