மும்பை: பிரதமருக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் இந்தியாவில் இருந்து பணத்தை வெளியே அனுப்பி பின்னர் அதே பணத்தில் சொத்துகளை வாங்க அனுமதிக்கப்பட்டது. அதானி குழும முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உலகளவில் இந்தியாவின் மதிப்பை உறுதி செய்யும் ஜி20 மாநாட்டுக்காக தலைவர்கள் வரும் இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது அவசியம். வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கத் தவறினால் ஜி20 மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் அது குறித்து கேள்வி எழுப்ப நேரிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.