கொழும்பு: அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3,300 கோடி காற்றாலை மின் திட்டத்தை அரசு ஒப்பந்தமாக மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மின் திட்டத்தை டெண்டர் இல்லாமல் வழங்கியதாக எழுந்த புகாரை சமாளிக்க இலங்கை அரசு புதிய முடிவு செய்துள்ளது. சட்டச் சிக்கல்களை சமாளிக்க இந்தியா-இலங்கை அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தமாக மாற்ற முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.