மதுரை: ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆடல், பாடல் குறித்து அனுமதி கோரி மனு அளித்த 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க ஏற்கனவே உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அருகே சிந்தாமணிபட்டி பகுதியி ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி கோரப்பட்டு திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தனித்தனியே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். கோயில் திருவிழாக்களின் போது நடத்தப்படும் இது போன்ற ஆடல் பாடல், நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நீதிமன்றமும், காவல்துறையும் விதிமுறைகளை வகுத்துள்ளது.
இதனையடுத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரினால் மனு தந்த 7 நாட்களில் அனுமதி தர வேண்டும், அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும். அப்படி கூறாவிட்டால், அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், ஆடல் பாடல் நிகழ்வு குறித்து புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரிக்க வேண்டியதில்லை.
முன்பு கூறியவாறு மனு தந்த 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்பிறகு இன்று வந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனுவில் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே இருக்கும் உத்தரவை முறையாக பின்படுத்த வேண்டும் என்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனுதாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்