சென்னை: சென்னை, ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த மஞ்சன் (55) என்பவர் நேற்றிரவு மதுபோதையில் ஜாபர்கான் பேட்டை பச்சையப்பன் தெரு சாலையோரத்தில் படுத்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் மஞ்சன் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில் காரை ஓட்டி வந்தது, எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி (25) என்பதும், இவர் நடிகை ரேகா நாயரின் வீட்டில் கார் டிரைவாக பணிபுரிந்து வருவதும், கார் நடிகை ரேகா நாயரின் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாண்டியை கைது செய்தனர்.