சென்னை: 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ரூ.20 லட்சத்தை டெபாசிட் செய்ய நடிகை ஜெயப்பிரதாவுக்கு உத்தரவிடப்பட்டது. திரையரங்கு ஊழியரிடம் வசூலித்த இஎஸ்ஐ தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.