ராமநாதபுரம்: நடிகை கவுதமியின் சொத்துக்களை நிர்வகித்து வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பாஜ பிரமுகர் அழகப்பன், முதுகுளத்தூர் பகுதியில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில் ரூ.3.16 கோடி மோசடி செய்ததாக ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷிடம் நடிகை கவுதமி கடந்த மே மாதம் அளித்த புகார் அளித்தார். இந்த வழக்கில் கைதான அழகப்பனை ஒரு போலீஸ் காவலில் விசாரிக்க ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், அழகப்பனை ரகசிய இடத்தில் வைத்து நேற்று தீவிர விசாரணை செய்தனர். மீண்டும் நேற்று மாலை 5.30 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.