சென்னை: நடிகை கவுதமி புகாரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகை கவுதமி அளித்த புகாரை அடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அழகப்பன் உட்பட அனைவரும் தலைமறைவாக இருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.