திருவனந்தபுரம்: நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்திவரும் நிலையில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக கேரள அரசு எஸ்.ஐ.டி. அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.