Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

42 வயதான நடிகை ஷெபாலி மரணம்: பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி

மும்பை: பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா திடீரென மரணமடைந்ததால் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘காந்தா லாகா’ ரீமிக்ஸ் பாடல் மூலம், ஒரே இரவில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42). அந்தப் பாடல், அன்றைய இளைஞர்கள் மத்தியில் அலையை உருவாக்கியது. தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், அக்சய் குமார் நடித்த ‘முஜ்சே ஷாதி கரோகி’ (2004) திரைப்படத்திலும் நடித்த ஷெபாலி ஜரிவாலா, புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது தெளிவான பேச்சால் அனைவராலும் அறியப்பட்ட முகமானார்.

கடந்த 2015ம் ஆண்டு நடிகர் பராக் தியாகியைத் திருமணம் செய்துகொண்ட இவர், தனது கணவருடன் இணைந்து ‘நச் பலியே’ 5 மற்றும் 7 ஆகிய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் நேற்று இரவு மும்பையில் திடீரென ஷெபாலி ஜரிவாலா காலமானார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது கணவர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திடீர் மாரடைப்பால் ஷெபாலி ஜரிவாலா இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருந்தும் அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து குடும்பத்தினர் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை ஷெபாலி ஜரிவாலாவின் இந்த திடீர் மறைவு, ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.