சென்னை: தமிழ் திரையுலகில் 70, 90 வயது நடிகைகளின் அறை கதவுகளையும் தட்டுகிறார்கள் என்றார் அம்மா நடிகையான சாந்தி வில்லியம்ஸ். இது தொடர்பாக பிரபல அம்மா நடிகையான சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.அவர் கூறியதாவது: மலையாள திரையுலகத்தை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. காரணம் அங்கு அரசியல் அதிகம்.
இங்கு (தமிழ் சினிமாவில்) பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை. இங்குள்ளவர்கள் 60, 70 மற்றும் 90 வயதுடைய பெண்களின் அறைகளுக்கு கூட இரவில் வந்து கதவை தட்டுகிறார்கள். இது எனக்கு பிடிக்காத விஷயம். நான் சில காலமாக படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் திரையுலகத்தில் எனக்கு அப்படி இல்லை. அவர்கள் ஒருபோதும் எங்களின் கதவுகளை தட்டவில்லை. எங்களிடம் தவறாகவும் நடந்து கொண்டதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.