திருவனந்தபுரம்: உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜானகி ஜானே என்ற திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு சென்றபோது உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.