சென்னை: நடிகை கவுதமியின் நிலத்தை விற்று மோசடி செய்த புகாரில் அழகப்பன் வீட்டில் 11 அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சோதனையின்போது ஆவணங்கள் இருந்த 11 அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தனது ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரித்ததாக அழகப்பன், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது நடிகை கவுதமி புகாரளித்தார். நடிகை கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் அழகப்பனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.