திருவள்ளூர்: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை, குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.