மும்பை: நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம்ஆத்சி எம்பி ராகவ் சதாவுக்கும் நடைபெறும் திருமண தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதாவுக்கும் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் பரினீதி – ராகவ் ஜோடிக்கு வரும் செப்டம்பர் 25ம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளியான செய்தியில், ‘பரினீதி – ராகவ் ஜோடிக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் திருமணம் நடைபெறும்.
வரவேற்பு நிகழ்ச்சிகள் குருகிராமில் நடைபெறும். தம்பதியரின் பெற்றோர்களான பவன் சோப்ரா-ரீனா சோப்ரா மற்றும் சுனில் சாதா-அல்கா சதா ஆகியோர், குருகிராமில் உள்ள ஓட்டல்களில் உணவைச் சுவைத்து பார்த்து உறுதி செய்துள்ளனர். ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் தான், கடந்த 2018ல் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனாஸும் திருமணம் செய்து கொண்டனர்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.