திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் பாபி செம்மண்ணூர். தனது பெயரில் கேரளா, தமிழ்நாடு, வெளிநாடுகளில் ஏராளமான நகைக் கடைகளை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் பாபி செம்மண்ணூர் தன்னிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக கூறி கொச்சி மத்திய போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கொச்சி மத்திய போலீசார் நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில்,‘‘பாதிக்கப்பட்ட நடிகையிடம் பாபி செம்மண்ணூர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார். இரட்டை அர்த்தத்துடன் பேசி அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.