Tuesday, April 23, 2024
Home » ஓட்டுக்காக நடிகர், நடிகைகளை பாஜவுல சேர்ப்பாங்களாம்… ஆனா அரசியல் பேசக்கூடாதாம்…

ஓட்டுக்காக நடிகர், நடிகைகளை பாஜவுல சேர்ப்பாங்களாம்… ஆனா அரசியல் பேசக்கூடாதாம்…

by Ranjith

கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர்கள் எதற்கு குரல் கொடுக்க வேண்டும்? அவர்கள் சமுதாயத்தில் சமூக ஆர்வலர்களாக இருக்கிறார்களா? தன்னார்வலாராக இருக்கிறார்களா? சாமான்ய வாழ்க்கை வாழ்கிறார்களா? சாலையில் சென்று மக்களின் கஷ்டத்தை பார்க்கிறார்களா? எதற்கெடுத்தாலும் நடிகர்கள்தான் பேச வேண்டும் என்ற மன நிலையில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும். நடிகர்கள் சிறு வட்டத்திற்குள் வாழ்கிறார்கள் அவ்வளவுதான்.

நடிகர்களை கொண்டு வந்து எல்லா பிரச்னைக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்பது மக்களின் கருத்து. அதிலிருந்து முதலில் வெளியே வர வேண்டும். இன்று நடிகர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர்களது பேச்சே அரசியல் சார்ந்துதான் இருக்கிறது. நடிகர்களின் பணி நடிப்பு மட்டுமே. அவர்களை பார்த்து கைதட்டினோமா என்பதுடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாஜவில் சமீப நாட்களாக புள்ள பிடிக்கும் வேலையை கையில் எடுத்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரபலங்கள், முன்னாள் முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்களின் வாரிசுகள் என தேடி தேடி சென்று பேரம் பேசிய கட்சியில் சேர்த்து வருகிறது. இதில் சிலர் நடிகர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டும் பாஜ சார்பில் வழங்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலிலும் பலருக்கு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக முக்கிய பிரபலங்களுக்கு நியமன எம்பி பதவி, மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரசாரத்துக்கு எல்லாம் பாஜ சார்பில் நடிகர், நடிகைகள் அனுப்பி வைத்துவிட்டு வேட்பாளர்களாவும் அவர்களை களமறிக்கிவிட்டு அண்ணாமலை இப்போது பேசியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும்போல பேசி உள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சை இனிமேல் எது பேசினாலும் கொஞ்சும் உங்க முதுகை திரும்பி பார்த்து பேசுங்கள். நாட்டிலேயே அதிக நடிகை, நடிகர்கள் இருக்க கட்சி பாஜதான் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

* வெயிட்டான தலைவர்கள் எங்க கூட்டணியில இருக்காங்க
சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: தமிழக பாஜ கூட்டணி மிக அற்புதமாக சென்று கொண்டு இருக்கிறது. பலம் பொருந்திய தலைவர்கள் பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், சரத்குமார், ஜி கே வாசன் போன்றவர்கள் இருக்கின்றனர். இவர்கள் தவிர மேலும் சில கட்சிகள், பிரதமர் மோடியின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர்கள், எங்களோடு கூட்டு சேர்கின்றனர் என்றார்.

You may also like

Leave a Comment

1 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi