சென்னை: நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணம் என கேரள ஐ.பி.எஸ். அதிகாரி உன்னிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். பீர் குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் 12, 13 பாட்டில் வரை கலாபவன் மணி பீர் குடித்து வந்துள்ளார். ஏற்கனவே நீரிழிவு நோயால்: பாதிக்கப்பட்டிருந்த கலாபவன் மணிக்கு கல்லீரல் பாதிப்பும் இருந்துள்ளது.