திருமலை: தெலுங்கு திரைப்பட மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜாவை 2007ல் ஷிரிஷ் பரத்வாஜ் காதலித்து வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு சட்டப்படி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 2016ல் ஸ்ரீஜா- கல்யாணை திருமணம் செய்து கொண்டார். 2019ல் ஷிரிஷ் பரத்வாஜ் மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக பல ஆண்டுகளாக அவதிப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிரிஷ் பரத்வாஜ் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
நடிகர் சிரஞ்சீவி மகளின் முன்னாள் கணவர் காலமானார்
165