மதுரை: மதுரை வண்டியூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க முழுக்க பக்தி மாநாடு. இதில் அரசியல் கிடையாது. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து அறநிலையத்துறை இதுபோன்ற மாநாட்டை நடத்தியுள்ளது. அது வேறு.
இது பொதுமக்களுக்கு பயனுள்ள பக்தி மாநாடாக அமையும். அண்ணாமலை வேல் யாத்திரை நடைபயணம் நடத்தினார். சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு யாத்திரையாக அழைத்து செல்வதுதான் என்னுடைய யாத்திரை. நாடாளுமன்ற தேர்தலில் நான், சீனிவாசன் உட்பட சிலர் இரண்டாவது இடத்திற்கு வந்தோம். இனி நாங்கள் முதல் இடத்திற்கு வந்து சட்டமன்றத்திற்கு போவோம். அதிமுக கூட்டணிக்கு வருமாறு நடிகர் விஜய்க்கு மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ அழைப்பு விடுத்ததை வரவேற்கிறோம். இவ்வாறு கூறினார்.