சென்னை: நடிகர் சிவாஜி இல்ல ஜப்தி பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஜப்தி உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சிவாஜி பேரன் துஷ்யந்த்துடனான கடன் பிரச்சனையில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டது. சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்யக் கோரிய வழக்கை தனபாக்கியம் நிறுவனம் வாபஸ் பெற்றது. பட தயாரிப்புக்காக தனபாக்கியம் நிறுவனத்திடம் துஷ்யந்த் நிறுவனம் கடன் வாங்கியிருந்தது. ரூ.9 கோடி கடனுக்காக சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிடக் கோரி தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வீடு தன்னுடையது என நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை ஏற்று ஜப்தி உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது.
நடிகர் சிவாஜி இல்ல பிரச்சனை முடிவுக்கு வந்தது
0