ஐதராபாத்: தெலுங்கில் ‘அதிர்ஸ்’, ‘தீ’, ‘மிரப்காய்’ உள்பட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், நகைச்சுவை நடிகர் பிஷ் வெங்கட். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘காபி வித் எ கில்லர்’ என்ற படத்திலும், முன்னதாக ‘மா வின்ட காதா வினுமா’, சித்தூ ஜொன்னலகட்டவுடன் ‘டிஜே தில்லு’ என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக, அவரது மகள் ஸ்ரவந்தி தெரிவித்திருந்தார். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 50 லட்ச ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பான் இந்தியா நடிகர் பிரபாஸ் 50 லட்ச ரூபாய் கொடுத்து உதவ முன்வந்துள்ளார். மேலும், மாற்று சிறுநீரக ஏற்பாடு தொடங்கி, அறுவை சிகிச்சை வரை அனைத்துக்கும் தவறாமல் உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். இத்தகவல் இணையதளங்களில் வைரலாகி, பிரபாஸுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிறுநீரக கோளாறால் உயிருக்கு போராடும் நடிகருக்கு பிரபாஸ் ரூ.50 லட்சம் உதவி
0