சென்னை: திரைப்பட நடிகர் ராஜேஷ் மறைவுக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் ராஜேஷ் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
மேலும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக (2022-24) இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான முறையில் பணியாற்றியபோது ராஜேஷூடன் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. நேற்று காலை எதிர்பாராத விதமாக ராஜேஷ் (75) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.