சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடிகர் கூல் சுரேஷ் சுவாமி தரிசனம் செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலுக்கு காமெடி நடிகர் கூல் சுரேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
மலையடிவாரத்தில் இருந்து ரோப்காரில் மலைக் கோயிலுக்கு சென்று யோக நரசிம்மரை தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனத்திற்கு பின்னர் மலையிலிருந்து ரோப் காரில் இறங்கி வந்து 406 படிகள் கொண்ட சிறிய மலை ஆஞ்சநேயர் கோயிலுக்கு படிகள் வழியாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் கூல் சுரேசுடன் பொதுமக்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.