சென்னை: தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு கேட்டு போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்திக் குமாரை 2005ம் ஆண்டு திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார் சுசித்ரா. பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். சமீபத்தில், ‘திருமணம் ஆகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்து விட்டது’ என்று சுசித்ரா கூறியிருந்தார்.
கார்த்திக் குமார், சுசித்ரா மீது தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சுசித்ரா தனது யூடியூப் சேனலில் மன்னிப்பு வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘இந்த மன்னிப்பு வீடியோவை பட்டினப்பாக்கம் போலீஸ் சொன்னதால் போடுகிறேன். ‘மன்னிப்பை கேட்க மாட்டேங்கிறே. உன்னை தூக்கி உள்ளே வச்சுடுவேன்’ என்று பட்டினப்பாக்கம் எஸ்ஐ விஜயலட்சுமி மிரட்டுகிறார். அதனால், உங்களை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொன்னதற்காக என்னை மன்னித்து விடுங்கள் கார்த்திக் குமார். அதை நான் இப்போது மாற்றி உலகத்திலே ஒரே ஆம்பளை நீங்கதான் என்று சொல்ல விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.