சென்னை: நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 2019ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த “நட்பே துணை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தவர். நடிகர் பிஜிலி ரமேஷ் இறுதிசடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறுகிறது