சென்னை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
திரைப்பட நடிகர் ரஞ்சித் தான் இயக்கி நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படத்தில் திட்டமிட்டு சமூக அமைதியை சீர்குலைக்கிற வகையில் பல்வேறு காட்சிகளை அந்த திரைப்படத்தின் டிரெய்லரில் வைத்திருந்தார். இதுதொடர்பாக நாங்கள் காவல்துறை டிஜிபியிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தோம். திரைப்பட தணிக்கை குழுவிடமும் புகார் அளித்திருந்தோம்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், ஆணவ படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆணவக் கொலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு இவ்வாறு மோசமாக நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே நடந்த படுகொலைகளுக்கும் நியாயம் இருக்கிறது என்று சட்டத்திற்கு புறம்பான வகையிலும் பேசி வருவது என்பது மிகப்பெரிய ஒரு தீவிரவாத செயலாகத்தான் பாக்க ேவண்டும். எனவே நடிகர் ரஞ்சித் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.