சென்னை: சென்னையில் நேற்று காலமான நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று வருகிறது. ராமாபுரம் இல்லத்தில் நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்குக்குப் பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. சென்னை ராமாபுரம் இல்லத்தில் நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப் படை ஊழியர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.