Thursday, February 29, 2024
Home » இறுதி நிகழ்வில் பங்கேற்காதது வாழ்நாள் துயரமாகிவிட்டது.. ஜன.19ல் நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம்: நடிகர் கார்த்தி

இறுதி நிகழ்வில் பங்கேற்காதது வாழ்நாள் துயரமாகிவிட்டது.. ஜன.19ல் நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம்: நடிகர் கார்த்தி

by Nithya

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு ஜனவரி 19ம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும் என்று நடிகரும், சங்கத்தின் பொருளாளருமான கார்த்தி அறிவித்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவரும் , நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார். பின்னர் அடுத்த நாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார்; விஜயகாந்த் உடனான திரையுலக அன்பவங்களை பகிர்ந்து கொண்டார். கலைஞரின் கலையுலக பொன்விழாவை விஜயகாந்த் தனி ஒரு ஆளாக முன்நின்று பிரமாண்டமாக நடத்தி முடித்ததாக சிவகுமார் நினைவு கூர்ந்தார்.

விஜயகாந்த் பங்கேற்கும் படப்பிடிப்பு தளமும், அன்னதான இடமாக மாறி விடும் என நடிகர் கார்த்திக் நெகிழ்ச்சி தெரிவித்தார். கேப்டன் நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நடிகர் சங்கத் தேர்தலில் சவால் வரும் போதெல்லாம் விஜயகாந்தை நினைக்க தவறுவதில்லை என்று கூறிய கார்த்திக், அவர் மறைவுக்கு வருகின்ற 19ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்ய முடியவில்லை என்பது என் வாழ்நாள் துயரமாகிவிட்டதாகவும், அவர் எப்போது எங்கள் மனதில் இருப்பார் என்றும் கார்த்தி உருக்கமாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

sixteen + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi