புதுடெல்லி: திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவி ஜோதியை மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்றதாக அவருக்கு திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பெண்ணின் கணவர் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘95 சதவீத தீக்காயத்துடன் இருந்த ஜோதியால் தெளிவாக வாக்குமூலம் அளித்திருக்க முடியாது. எனவே இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், இந்த விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவு மற்றும் ஆயுள் தண்டனை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் விவகாரத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகளை எப்படி சந்தேகிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ரமேஷ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்ததோடு, ரமேஷின் ஆயுள் தண்டனைடிய உறுதி செய்தனர்.