*தேசிய விளையாட்டு தின விழாவில் எம்பி தகவல்
சித்தூர் : சித்தூர் மாவட்டத்துக்கு தேவையான விளையாட்டு பயிற்சியாளர்களை மத்திய, மாநில விளையாட்டு அமைப்புகள் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய விளையாட்டு தின விழாவில் எம்பி தெரிவித்தார். விளையாட்டு ஜாம்பவான் தயான்சந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சித்தூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சித்தூர் எம்பி பிரசாத் ராவ் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து கலெக்டர் பங்களா, காந்தி சர்க்கிள் வரை தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வு பேரணியை எம்.பி கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் உருவப் படத்துக்கு ஜோதி ஏற்றி மலர் தூவி மரியாதை செய்தார்.பின்னர் எம்பி பிரசாந்த் ராவ் பேசியதாவது: பாகங்கா ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மாணவ மாணவிகள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். இன்று(நேற்று) தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம் என்பது அனைவரும் அறிந்ததே.ஆகஸ்ட் 29 முன்னாள் இந்திய ஹாக்கி வீரரின் 114 வது பிறந்தநாளைக் குறிக்கிறது, மேலும் நாடு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு தினத்தை அனுசரிக்கிறது.
முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த், ஹாக்கி விளையாட்டில் உலகின் சிறந்த வீரராக கவுரவிக்கப்பட்டார். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 1928 ஆம்ஸ்டர்டாம், 1932 லாஸ் ஏங்கிள்ஸ், 1936 பெர்லினில் தங்கம் வென்ற இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்தார். 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) 24-1 அமெரிக்கா (உலக சாதனை) அனைத்து 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் தியான் சந்த் 12 போட்டிகளில் 33 கோல்களை அடித்தார் – 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் – 5 போட்டிகளில் 14 கோல்கள் அடிக்கப்பட்டன.
பத்ம பூஷன் விருது, இது இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருது ஆகும். தயான் சந்த் 29 ஆகஸ்ட் 1905 அன்று அலகாபாத்தில் (உ.பி.) பிறந்தார். பதினாறு வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். தியான் சந்த் 22 வருட வாழ்க்கையில் (1926-1948) உலகில் உள்ள மற்ற ஹாக்கி வீரர்களை விட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்களை அடித்தார். 3 டிசம்பர் 1979 அன்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இறந்தார். ஒரு வருடம் கழித்து, இந்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் தபால் தலையை வெளியிட்டது. ஆகவே தற்போதுள்ள மாணவ மாணவிகள் நன்றாக படித்து அதை போல் விளையாட்டிலும் நன்றாக விளையாடி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க பாடுபட வேண்டும்.
சித்தூர். மாவட்டத்துக்குத் தேவையான விளையாட்டுப் பயிற்சியாளர்களை மத்திய, மாநில விளையாட்டு அமைப்புகள் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சித்தூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் நற்பெயரை கொண்டு வர வேண்டும். மாவட்டத்தில் விளையாட்டுக்கு தேவையான வசதிகள் செய்து தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலாஜி, மாவட்ட துணைக் கல்வி அலுவலர் சந்திரசேகர், மாநில கைப்பந்து துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஒலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகர் ரெட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பி.டி.இ.க்கள், பி.டி.க்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.