சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும். தற்போது 116 இந்திய மீனவர்கள் மற்றும் 184 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இலங்கை கடற்படையின் செயலால் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை மேலும் மோசமாகி உள்ளது என்று வலிவுறுத்தியுள்ளார்.