கோவை: கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை அமைச்சரும், இதழாளர் விழா குழு தலைவருமான மு.பெ. சாமிநாதன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘போலி பத்திரிகையாளர்கள் தங்களது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசு மூலம் என்ன செய்ய முடியுமோ அதன்படி முதல்வருடன் கலந்து பேசி போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், யூடியூப் ஆகியவற்றின் மீது ஒன்றிய அரசு தனிக்கவனம் செலுத்தி இதனை வரன் முறைப்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.