ஐசிசி அறிவித்துள்ள சிறப்பு அணியில் இந்தியாவின் கொங்காடி திரிஷா துவக்க வீராங்கனையாக முதலிடம் அளிக்கப்பட்டுள்ளார். இவர் உலகக் கோப்பை போட்டியில் 309 ரன்களை குவித்தவர். இவரது சராசரி 77.25 ஆகவும், ஸடிரைக் ரேட் 147.14 ஆகவும் உள்ளது. இவரது அதிகபட்ச ஸ்கோர், 100 நாட்அவுட். இவர், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 15 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை கமாலினிக்கு ஐசிசி அணியில் 4வது இடம் தரப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரை இறுதியில் 50 பந்துகளில் 56 ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்டவர் கமாலினி. தவிர, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் விளாசியுள்ளார். ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீராங்கனை ஆயுஷி சுக்லா, உலகக் கோப்பை போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
இவரது சராசரி ரன் அளிப்பு 5.71. சிக்கன பந்து வீச்சு சராசரி 3.01. சிறந்த பந்து வீச்சாக, ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 8 ரன் தந்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மற்றொரு பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரது சராசரி ரன் அளிப்பு 4.35. சிக்கன பந்து வீச்சு சராசரி 3.36. சிறந்த பந்து வீச்சாக மலேசியாவுக்கு எதிரான போட்டியில் 5 ரன் தந்து 5 விக்கெட் வீழ்த்தினார். அதில் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் அடக்கம்.