விஜயவாடா: ஊழலுக்கு எதிராக போராடுவதும் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்துவருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தில், சுங்கத்துறையின் தேசிய பயிற்சிப் பள்ளியையும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறைமுக வரி கட்டிட வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; நாட்டின் வரி கட்டமைப்பில் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டு வந்த சீர்திருத்தங்களால் வரி வருவாய் அதிகரித்துள்ளது.
ஊழலுக்கு எதிராக போராடுவதும், ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சீர்திருத்தங்களால் நாட்டில் தற்போது வரி வசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வரி முறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அரசு தொடர்ந்து போதுமான வருவாய் பெறுவதில் மக்களுக்கு பங்குள்ளது. எந்த வகையில் வசூலித்தாலும் அத்தொகையை பல்வேறு விதமாக மக்களுக்கு திருப்பித் தந்து வருகிறது அரசு இவ்வாறு கூறினார்.