திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பதிவுபெறாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். சுற்றுலா நிறுவனங்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுபெறாமல் இயங்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எந்த அறிவிப்பின்றி சீல்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. tourismtvr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் மேல் விவரங்களை அறியலாம் என கூறப்படுகிறது.