Monday, December 11, 2023
Home » நேர்மையுடன் செயல்பட வேண்டும் பழிவாங்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபடக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து

நேர்மையுடன் செயல்பட வேண்டும் பழிவாங்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபடக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து

by Dhanush Kumar

புதுடெல்லி: அமலாக்கத்துறை நேர்மையுடன் செயல்பட வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனர்களான பங்கஜ் பன்சால், பசந்த் பன்சால் ஆகியோரை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சஞ்சய்குமார் ஆகியோர் அமலாக்கத்துறையை சரமாரியாக விமர்சனம் செய்தனர். அவர்கள் கூறியதாவது: அமலாக்கத்துறை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது. மிகுந்த நேர்மையுடன் செயல்பட வேண்டும். அமலாக்கத்துறைக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிலளிக்கத் தவறினால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்எ ன்பது சரியல்ல. அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் மோசமாக பிரதிபலிக்கிறது. இனிமேல் ஒருவரை கைது செய்ய எழுத்துப்பூர்வமாக கைதுக்கான காரணங்களின் நகல் அவசியம் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான காரணங்களை வழங்குவதில் அமலாக்கத்துறையால் நிலையான மற்றும் சீரான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. இது நாட்டின் சில பகுதிகளில் வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற பகுதிகளில் வழங்கப்படவில்லை. இந்தத் தகவலைத் தெரிவிப்பது, கைது செய்யப்பட்ட நபரை அவர் ஏன் கைது செய்கிறார் என்பதைத் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அத்தகைய நபர் சட்ட ஆலோசகரைப் பெறுவதற்கும், அதன்பிறகு, ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு 45வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் உதவுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?