போடி: தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், சுருக்கெழுத்து இளநிலை ஆங்கிலத்தில் 7.77 சதவீதம் பேரும், தமிழில் 28.70 சதவீதம் பேரும், சுருக்கெழுத்து முதுநிலை ஆங்கிலத்தில் 19.81 சதவீதம் பேரும், தமிழில் 53.41 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் சுருக்கெழுத்து தமிழ் முதுநிலை தேர்வில் தேனி மாவட்டம், போடி குலாலர்பாளையத்தை சேர்ந்த பரசிவம் மனைவி மணிமேகலா (36) 2ம் இடமும், அவரது மகள் அபிராமி (17) சிறப்பு முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.