தாம்பரம்: தி.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (26), ஏசி மெக்கானிக். இவர், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கடந்த ஒரு வாரமாக ஏசி பழுது பார்க்கும் வேலையை வேலாயுதம், தம்பிதுரை ஆகியோருடன் இணைந்து செய்து வந்தார்.அதன்படி, நேற்று முன்தினம் பிரேம்குமார் ஏசி பழுது பார்க்கும் வேலை செய்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.