சாத்தான்குளம், நவ.6: சாத்தான்குளத்தில் விபத்தின்றி தீபாவளி கொண்டாடுவது குறித்த துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் தீயணைப்புத் துறையினர் விநியோகத்தினர். தித்திக்கும் தீபாவளி பண்டிகை வரும் 12ம்தேதி கொண்டாடப்படுவதையொட்டி தமிழகத்தில் பட்டாசுகள் வெடிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் பஸ் நிலையம் மற்றும் கடை வீதி பகுதியில் தீயணைப்பு நிலை அலுவலர் மாரியப்பன் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர் சதீஷ்குமார், வீரர்கள் சுரேஷ்குமார், மாணிக்க சீனிவாசகம், சுப்பிரமணியன், சீனிவாசன், துரை ஆகியோர் விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து பிரசாரம் மேற்கொண்டனர்.
இதுகுறித்த விதிமுறைகள், பாதுகாப்புடன் அடங்கிய விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்கள், ஆட்டோ டிரைவர், வியாபாரிகளிடம் வழங்கினர்.