சென்னை: பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு என மின்வாரியம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணியில் ஈடுபடுவது, முறையான கண்காணிப்பு இல்லாதது உள்ளிட்டவைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அனைத்து மின் பணியாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பணியாளர்களால் பணிகளை மேற்கொள்வதற்கு முன் உடன் இருக்கும் மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரிபார்த்து, சரியான தனிமைப்படுத்தலை உறுதி செய்ய வேண்டும். மேலும், பணியாளர்கள் பணியின் போது எர்த்ரோட் பயன்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், பல்வேறு அறிவுறுத்தல்கள் மின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டாலும், அந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் அதற்கு பணியாளர்களே பொறுப்பாவார்கள் என்றும் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.