சென்னை: விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் திறந்தவெளியில் ஒன்றுகூடி பட்டாசு வெடிக்க முன்அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.